ஆமி ஸ்க்லோசர்"சுகபோகமாக இருப்பவர்களுக்கு ஐயோ"
ஆமோஸ் உங்கள் வழக்கமான தீர்க்கதரிசி அல்ல. அவர் தெக்கோவா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஆடுகளை மேய்ப்பவர். ஊழல் மற்றும் பணக்கார உயர் வர்க்க குடிமக்களுக்கு பிரசங்கிக்க இஸ்ரவேலின் வடக்கு இராஜ்ஜியத்திற்கு அனுப்பப்பட்டார். யூதாவின் அரசனாக உசியாவும், இஸ்ரவேலின் அரசனாக இரண்டாம் யெரோபெயாமும் இருந்தபோது,இவருடைய புத்தகம் கி.மு 760-750க்கு இடைப்பட்டதாக இருக்கலாம். அவரது பெயர் "தாங்க" அல்லது "சுமை தாங்குபவர்" என்று பொருள்படும், மேலும் அவர் தனது வடக்கு அண்டை நாடுகளுக்கு ஒரு கடினமான செய்தியின் சுமையை உண்மையில் தாங்கினார்.
ஏதோம், அம்மோன், மோவாப், தீரு, காசா மற்றும் தமஸ்கு இஸ்ரவேலுக்கு வெளியே உள்ளவர்கள் உட்பட பல்வேறு குழுக்களுக்கு ஆமோஸ் தீர்ப்புச் செய்தியைக் கொண்டு வருகிறார். அவரது புத்தகத்தில் நியாயத்தீர்ப்பு மற்றும் தரிசனங்கள் மற்றும் இரட்சிப்பின் செய்தி ஆகியவை அடங்கும். இருப்பினும், புத்தகத்தில் மீண்டும் மீண்டும் தோன்றும் ஒரு மையக் கருத்து “சமூக நீதி” ஆகும். இந்த வார்த்தை பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சாரத்தில் ஆமோஸ் குறிப்பிடுவதை விட மிகவும் வித்தியாசமான ஒன்றைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. இதன் பின்னணியில் இன்று உலகின் பல பகுதிகளிலும், வரலாற்றின் பெரும்பகுதி முழுவதும் மன்னர்கள் மற்றும் தலைவர்கள் கூட கேள்விப்படாத செல்வம் மற்றும் வசதியுடன் மக்கள் வாழ்கின்றனர். பல சமயங்களில், மேல்தட்டு வர்க்கத்தினர் வரலாறு முழுவதும் குவித்த செல்வம் மற்றவர்களின் இழப்பிலும், ஊழல் மூலமாகவும் இருந்தது. இது தேவைப்படுபவர்களின் புறக்கணிப்பு மட்டுமல்ல, மாறாக, சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை மிதிக்கச் செய்யும் செயல். யாரோ ஒருவனின் செலவில் ஆடம்பரம் சம்பாதிக்கும் இவர்களிடம் நேரடியாகப் பேசப் போகிறார் ஆமோஸ்.
இஸ்ரவேலர்கள் "நீதிமான்களை வெள்ளிக்கும் தேவையுள்ளவரை ஒரு ஜோடி செருப்புக்கும் விற்கிறார்கள்" ஆமோஸ் (2-6) என்று அவர் தனது நியாயத்தீர்ப்பைத் தொடங்குகிறார். அவர்கள் முக்கியமாக தங்களுக்கு வேண்டியவர்களை அடிமைகளாக விற்கிறார்கள். யாத்திராகமம் 22:26-27 ல் பிறருடைய வஸ்திரத்தை இரவலாக வாங்க கூடாது என்ற சட்டத்தை ஆமோஸ் 2:8இல் மீறினார்கள். இந்த மக்கள் இந்தக் கட்டளையை மீறுவது மட்டுமல்லாமல்,பலிபீடத்தின் அருகே அடமானமாய் எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு ஆடையில் படுத்துக்கொண்டு தங்கள் மீறல்களை வெளிப்படுத்துகிறார்கள்.
அதிகாரம் 4 இல், ஆமோஸ் ஒரு குறிப்பிட்ட குழுவை சுட்டிக்காட்டுகிறார்- இஸ்ரவேலின் செல்வந்த பெண்கள் மற்றும் அவர்களை "பாசானின் பசுக்கள்" என்று அழைக்கிறார். பாசான் வடக்கு இஸ்ரவேலில் ஒரு செழிப்பான பகுதியாக இருந்தது, அங்கு ஒருவர் தங்கள் மந்தையை பலியிடுவதற்கு அழைத்துச் செல்லலாம். இந்த பெண்கள் தங்கள் செழிப்பை மற்றவர்களுக்கு உதவ பயன்படுத்தவில்லை, மாறாக, ஏழைகளை ஒடுக்கவும், ஏழைகளை நசுக்கவும் பயன்படுத்துகிறார்கள். தந்தத்தால் பதிக்கப்பட்ட அவர்களின் கோடை மற்றும் குளிர்கால வீடுகளைப் பற்றி பேசும்போது ஆமோஸ் 3:15 இல் அவர்களின் செழிப்பின் அளவை அவர் தெளிவுபடுத்துகிறார். இந்த பெண்கள் ஆடம்பரமாக படுத்திருக்கிறார்கள், தங்கள் கணவர்கள் குடிக்க ஏதாவது கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களின் தீர்ப்பு கடுமையானது; ஆமோஸ் அவர்கள் மீன் கொக்கிகள் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கூறுகிறார் (இது ஒருவேளை அசீரிய சிறையிருப்புக்குள் செல்வதை குறிப்பிடுகிறது).
இந்த மக்கள் "மதரீதியாக செயல்படுகிறார்கள்”, ஆனால் கடவுள் அதை வெறுக்கிறார் . ஆமோஸ் 5:21-26 இல், அவர் அவர்களின் பண்டிகைகளை இகழ்ந்ததாகவும், அவர்களின் ஆசரிப்பு நாட்களையும், பாடல்களையும் விரும்பவில்லை எனவும் கூறுகிறார். அவர்கள் அந்நிய தெய்வங்களை எடுத்துக்கொண்டு, தங்கள் வழிபாட்டில் கலந்துவிட்டார்கள். எனவே, கடவுள் அவர்களின் பாடல்களைக் கேட்க மாட்டார் என்றும், அவர்களின் பலிகளையும் அங்கீகரிக்கமாட்டார் என்றும் கூறுகிறார். நீதியானது அவருடைய மக்களின் அடையாளங்களாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
அதிகாரம் 6 இல், ஆமோஸ் கூறுகிறார், "சமாதானமாய் இருப்பவர்களுக்கு ஐயோ, (1). தந்தம் பதித்த படுக்கைகளில் படுத்து ஆட்டுக்குட்டிகள் மற்றும் கன்றுகளை உண்பார்கள். அவர்கள் கிண்ணத்தில் மது அருந்துகிறார்கள். அவர்கள் யோசேப்பின் அழிவை நினைத்து வருத்தப்படுவதில்லை. அதற்கு பதிலாக அவர்கள் பெருமைப்பட்டு, "நீதியை விஷமாக மாற்றினார்கள்" (12).அவர்கள் தங்களுடைய கோதுமையை விற்கவும், தங்கள் நேர்மையற்ற செயல்களைத் தொடரவும்ஓய்வுநாள் முடிந்துவிட வேண்டும் என்று ஏங்கினார்கள் ஆமோஸ்(8:5). இந்த வசனங்கள் இஸ்ரவேலில் உள்ள உயர்வர்க்கத்தை பற்றி காட்டுகிறது. அவர்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்ததைக் கவனியுங்கள், ஆனால் இந்த பாதுகாப்பு நீடிக்காது என்று ஆமோஸ் அவர்களிடம் கூறுகிறார். உண்மையில், அவர்களின் அழிவு இன்னும் பல சகாப்தம் ஆகும்.
ஆமோஸின் செய்தி பிரபலமாகவில்லை. உண்மையில், பெத்தேலின் ஆசாரியன் அமத்சியா, அவரை வெளியேற்ற முயன்றார், யெரோபெயாமிடம் ஆமோஸ் ஒரு சதிகாரன் என்று கூறினார்.ஆமோஸ் பின்வாங்கவில்லை. மேலும் அமத்சியாவிற்கு எதிரான தீர்க்கதரிசனத்தை உரைக்கிறார்.. இச்செய்தியை வழங்க தேவனால் அழைக்கப்பட்டான் என்று அதிகாரம் 9 வசனங்கள் 11-15 இல் கூறுகிறது. தேவன் அவர்களுக்கு இரங்குவார் என்று இந்த புத்தகம் நிறைவடைகிறது. அது செல்வம் தானே பிரச்சனை அல்ல- மக்கள் தங்கள் செல்வத்தைப் பெறுவதற்கான வழி மற்றும் அவர்கள் அதை எவ்வாறு கையாண்டார்கள் என்பதுதான். அவர்களின் இருதயங்கள் சிதைந்தன. எல்லா மக்களிலும், மற்றவர்களுடன் எப்படி நடந்துகொள்வது மற்றும் கடவுளின் கட்டளைகளின்படி எவ்வாறு செயல்படுவது என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும்- ஆனால் அவர்கள் சுற்றியுள்ள நாடுகளை விட சிறந்தவர்கள் அல்ல.
எனவே, நமக்கு என்ன பாடம்? குறிப்பிட்ட நபர்களுக்கு எழுதப்பட்டாலும், இன்றும் நாம் பயன்படுத்தக்கூடிய சில அடிப்படை உண்மைகள் உள்ளன.
1. நாம் மற்றவர்களை புரிந்து கொள்கிறோமா?
2. தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்ற நாம் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம்?
3. நாம் சுகபோகமாய் வாழ்கிறோமா?
4. உண்மையான ஜீவியத்திற்காக தேவனை தேடுகிறோமா?
5. மற்றவர்களைவிட நாம் மாறுபட்டு ஜீவிக்கிறோமா?
இந்த பாடத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.